நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியாவில் ராணுவ ஆட்சிப் பிரகடனத்தை மீட்டுக்கொள்வதாக  அதிபர் அறிவிப்பு

சியோல்:

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்த ராணுவ ஆட்சிப் பிரகடனத்தை மீட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவப் பிரகடனம் மீட்டுக்கொள்ளப்படுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

முன்னறிவிப்பின்றி நேற்று தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பின்போது அதிபர் அது குறித்து தெரிவித்தார்.

உடனடியாகக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நாடாளுமன்றத்துக்கு வெளியே மோதல் ஏற்பட்டது.

ராணுவப் பிரகடனத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 190 பேரும் ஒருமனதாக வாக்களித்தனர். 

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அறிவிப்பை மீட்டுக்கொள்வதாக அதிபர் யூன் அறிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே போடப்பட்ட பாதுகாப்புத் துருப்புகளும் மீட்கப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset