நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா அரசு ஊழியர்கள் இரண்டு மாத சம்பளத்தை சிறப்பு நிதியுதவியாக பெறுவார்கள்: டத்தோஶ்ரீ சாரணி

ஈப்போ:

பேரா அரசு ஊழியர்கள் இரண்டு மாத சம்பளத்தை சிறப்பு நிதியுதவியாக பெறுவார்கள்.

பேரா மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ  சாரணி முகமத் இதனை அறிவித்தார்.

மாநில அரசு ஊழியர்களுக்கான இந்த சிறப்பு நிதியுதவி வரும் டிசம்பர் கடைசி வாரத்தில் முழுமையாக வழங்கப்படும்.

இந்த உதவி அரசால் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், ஒராங் பெசார் ஜஜஹான், கிராமத் தலைவர்கள், மலேசிய குறுகிய கால வேலை வாய்ப்புத் திட்டத்தின் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும்.

அனைத்து பேரா மாநில ஊழியர்களும் அளித்த பக்தியின் வெளிப்பாட்டிற்கான பாராட்டுக்குரிய அடையாளமாக,  இந்த இரண்டு மாத சம்பளத்தை அறிவிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset