
செய்திகள் தமிழ் தொடர்புகள்
புதுவையை நோக்கி புயல் நெருங்கி வருகிறது: புதுச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு இரண்டு நாட்களுக்கு சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டுள்ளதால், அனைத்து துறை அதிகாரிகளும் பணியில் இருக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
புயல் சின்னம் புதுவையை நோக்கி நெருங்கி வருவதின் காரணமாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை துறை இணைந்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு ஆட்சியர் குலோத்துங்கன் கூறியது: ''நாளை முதல் இரண்டு நாட்கள் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் புதுச்சேரியில் கனமழை பெய்ய இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளுக்கு சென்று தங்கள் பணிகளை தொடர உத்தரவிட்டுள்ளேன்.
அனைத்து பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுப் பணித்துறை, மின்துறை ஆகிய துறைகள் தங்கள் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அரை அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் செவி சாய்க்க தெரிவித்துள்ளேன்.
மக்கள் கேட்கும் உதவிகளை செய்து தரவும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பால் பாக்கெட் தடையின்றி விநியோகம் செய்ய அந்தந்த துறை அதிகாரிகள் பார்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm