நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

குடியரசுக்கான பிரதமரின் பணிப் பயணத்தின் மூலம் மலேசியாவில் இருந்து 32.8 பில்லியன் முதலீடு மற்றும் ஏற்றுமதி திறன் 1.3 பில்லியன் மதிப்பில் வெற்றிகரமாக எட்டப்பட்டது.

புதிய தொழில்களில் கவனம் செலுத்துவதுடன், ஹலால் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இரு நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ஹலாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

ஹலால் தயாரிப்புகள் கொரியாவில் உள்ள முஸ்லிம்களால் மட்டுமல்ல, பொதுவாக கொரியர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

அதனால்தான் ஏற்றுமதி மதிப்பு 5 பில்லியன் ரிங்கிட் வரை எட்டியது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset