செய்திகள் தமிழ் தொடர்புகள்
மும்பையில் 3ஆவது முறையாக எம்எல்ஏவான தமிழர்
மும்பை:
மும்பையில் சியோன் - கோலிவாடா தொகுதியின் மூன்றாவது முறையாக தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 1980ஆம் ஆண்டுகளில் வேலை தேடி மும்பைக்கு சென்றார். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் பார்சல் ஒப்பந்ததாரராக இருந்தவர் அவர்.
2008இல் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது பொதுமக்கள் 36 பேரை தைரியத்துடன் மீட்டார்.
இதனால் பிரபலமடைந்த தமிழ்ச்செல்வன், பாஜகவில் இணைந்து மும்பை மாநகராட்சி உறுப்பினர் ஆனார். தமிழர்கள் நிறைந்த தாராவி பகுதியை அடங்கிய சியோன் -கோலிவாடா தொகுதியில் 2014, 2019 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
மூன்றாவது முறையாக போட்டியிட்ட அவர் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்ச்செல்வனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் தோல்வியடைந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 4:12 pm
ஶ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
December 26, 2024, 3:05 pm
இண்டிகோ விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
December 26, 2024, 11:01 am
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை: கைதானவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
December 25, 2024, 9:40 pm
ஏர்ஆசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: திருச்சியில் பரபரப்பு
December 24, 2024, 6:09 pm