நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

லக்கீம்பூர் கெரி:

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதியதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

இந்தச் சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சேகர் பாரதியை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆசிஷ் மிஸ்ராவுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதால் தலைமை மாஜிஸ்திரேட் சிந்தா ராம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் என்று அரசு தரப்பு மூத்த வழக்குரைஞர் எஸ்.பி. யாதவ் தெரிவித்தார்.

கடந்த 9ஆம் தேதி ஆசிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் கைது செய்தனர். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset