நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க, தவிர்க்க  மலேசியா-சிங்கப்பூர் இணக்கம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரும் மலேசியாவும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்கவும் தவிர்க்கவும் ஓர் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

இருநாடுகளுக்கு இடையே கூட்டு முயற்சியை வலுப்படுத்த அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும்  சிங்கப்பூரின் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் அந்த இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

டத்தோஸ்ரீ சைபுடின்  சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட போது இது நிகழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இணக்கக் ஒப்பந்தத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், மோசடிகள் ஆகியவற்றைத் தடுக்க இருநாடுகளின் முயற்சிகளும் விரிவுபடுத்தப்படும்.

இருநாடுகளின் உள்துறை அமைச்சுகளும் சேர்ந்து பணியாற்றக் கூட்டுப் பணிக்குழு அமைக்கப்படவுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset