நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை வலுப்படுத்துகிறது: ஹசான்

லிமா:

பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் நவம்பர் 16 முதல் 19 வரை பிரேசிலுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணம் 65 ஆண்டுகளாக நிறுவப்பட்ட இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பிரதமர் இப்பயணத்தின் போது முதலில், பிரேசில் அதிபர்  லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.

இதை தொடர்ந்து நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

கடைசியாக 2015 ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் மலேசியா கலந்து கொண்டது.

அப்போது மலேசியா ஆசியான் தலைவராக இருந்தது. 

மேலும் 2025 ஆம் ஆண்டு மலேசியா, பிரேசிலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset