செய்திகள் மலேசியா
சபா மாநில ஊழல் விவகாரம் தொடர்பான செய்தியை நீக்க எம்.சி.எம்.சி உத்தரவு
கோத்தா கினாபாலு:
சபா மாநிலத்தில் ஊழல் விவகாரம் தலைவிரித்தாடுவதாக மலேசியாவின் பிரபல இணைய ஊடகமான மலேசியா கினி செய்தி வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட செய்திகளை மலேசியாகினி அகப்பக்கத்திலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி உத்தரவிட்டுள்ளது
சம்பந்தப்பட்ட செய்திகளும் அது தொடர்பான காணொலிகளும் போலிஸ் விசாரணைக்கு இடையூறு செய்யும் விதமாக இருக்கும் காரணத்தால் சம்பந்தப்பட்ட கட்டுரையை நீக்க வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகின்றது.
புகார் கொடுத்தவரின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பட்சத்தில் அதனை நீக்கம் செய்ய வேண்டும்,
முன்னதாக, ஊழல் நடவடிக்கை நடப்பதாக கூறி மாமன்னரிடம் திறந்த மடல் அனுப்பிய புகார்தாரருக்கு எதிராக கொலை மிரட்டல் இருப்பதை அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 507 இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 4:09 pm
எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க, தவிர்க்க மலேசியா-சிங்கப்பூர் இணக்கம்
November 17, 2024, 4:00 pm
பாறைக்கு பின்னால் இறால் பதுங்கி உள்ளது போல் எம்ஏசிசிக்கு தகவல் கொடுக்கிறார்கள்: ஹம்சா சாடல்
November 17, 2024, 3:50 pm
கொள்கலன் விழுந்து மரணமடைந்த என் மகளுக்கு நீதி வேண்டும்: தாயார்
November 17, 2024, 3:01 pm
ஆலய வழிபாட்டில் தலைக்கனம் வேண்டாம்; ஒன்றிணைந்து செயல்படுங்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
November 17, 2024, 2:16 pm
மாபெரும் தமிழ்த் தொண்டரான டத்தோ சாகுல் ஹமீதை இழந்துவிட்டேன்: தான்ஸ்ரீ குமரன்
November 17, 2024, 1:45 pm
பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை வலுப்படுத்துகிறது: ஹசான்
November 17, 2024, 1:35 pm
சொல்வயல் மலேசியத் தமிழ்க் கல்வியில் புதிய மைல்கல்
November 17, 2024, 1:19 pm
அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை
November 17, 2024, 11:54 am