நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாறைக்கு பின்னால் இறால் பதுங்கி உள்ளது போல் எம்ஏசிசிக்கு தகவல் கொடுக்கிறார்கள்: ஹம்சா சாடல் 

ஷாஆலம்:

8 சபா சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல் மோசடி குறித்த வீடியோவை வெளியிட்டவர்கள் பாறைக்கு பின்னால் இறால் பதுங்கி இருப்பது போல் எம்ஏசிசிக்கு தகவல் கொடுக்கிறார்கள் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் சாடினார்.

சம்பந்தப்பட்ட நபர்கள் அமைதியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும்.

தகவல் அளிப்பவர் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதால் யாருக்கு என்ன பயன்? குறிப்பாக தகவல் அளிப்பவர் யார் என்று யாருக்கும் தெரியக்கூடாது.

ஆனால் இந்த நபருக்கு அவர் யார் என்று ஏற்கனவே தெரியும்.  எனவே அங்கு ஒரு மோதல் உள்ளது.

இது தான் எம்ஏசிசி பிரச்சினையாக மாறியதற்கு காரணம்.

சிலாங்கூரில் ஷாஆலமில் நடைபெற்ற பெர்சத்து கட்சியின் சயாப் பிரிவு மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset