நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய வழிபாட்டில் தலைக்கனம் வேண்டாம்; ஒன்றிணைந்து செயல்படுங்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஆலய வழிபாட்டில் தலைகனம் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

செந்தூல் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தின் திருப்பணி தொடக்க பூஜை, திருப்பணி நன்கொடை தொடக்க நிகழ்வு ஆகியவை இன்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் செலவில் இவ்வாலயத்தின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆலய நிர்வாகத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றாக இணைந்து இம்முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அதே வேளையில் அனைவரையும் அரவணைத்து இம்முயற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் சட்ட ரீதியில் எந்த பிரச்சினையும் வரக் கூடாது.

குறிப்பாக ஆலய வழிபாடு விவகாரத்தில் யாரும் தலைகனத்துடன் செயல்படக்கூடாது. ஒன்றிணைந்து இந்த ஆலயத்தை கட்டி முடிக்க வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு அம்மாள் எப்போதும் துணை நிற்பார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset