செய்திகள் இந்தியா
இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் 100% பயணிகளுடன் இயங்க அனுமதி
புது டெல்லி:
இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வரும் 18ஆம் தேதி முதல் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்கலாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 85 சதவீத பயணிகளுடன் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 18 வரையிலான காலகட்டத்தில் 72.5 சதவீதமாகவும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 வரையில் 65 சதவீதமாகவும், ஜூன் 1 முதல் ஜூலை 5 வரையில் 50 சதவீதமாகவும் இருந்தது.

இந்நிலையில், விமானப் பயனிகளின் போக்குவரத்து அதிகரித்த காரணத்தால், வரும் 18ஆம் தேதி முதல் பயணிகளின் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
