நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய அணி ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.தோனி கட்டணம் வாங்கவில்லை - சவுரவ் கங்குலி

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.தோனி ஊதியமோ, கட்டணமோ பெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

முன்னாள் அணித்தலைவரும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளில் ஒருவருமான சவுரவ் கங்குலி இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கிண்ண டி-20 போட்டி நடைபெற உள்ளது. இத் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, அனைத்து நாடுகளும் உலகிக்கிண்ணத் தொடரில் பங்கேற்க உள்ள அணி குறித்த விவரங்களை அறிவித்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியமும் அணி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த உலகிக்கிண்ணத் தொடரில் எம்.எஸ்.தோனி, இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு முதல் டி-20 கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர் தோனி. மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சாதிக்க இவரது தலைமைத்துவம் முக்கியக் காரணமாகும்.

டி-20 தொடர்களில் பலமுறை சவாலான தருணங்களை எதிர்கொண்டு சமாளித்து, வெற்றிக்கனியைப் பறித்தவர் என்ற அடிப்படையில், டோணியின் அனுபவமும் ஆட்ட நுணுக்கங்களும் இளம் இந்திய அணிக்குப் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க சம்மதித்துள்ள தோனி, இதற்காக சம்பளமோ, கட்டணமோ கோரவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதை சவுரவ் கங்குலியும், கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset