
செய்திகள் விளையாட்டு
இஸ்ரேல் – பிரான்ஸ் போட்டிக்கு 4,000 போலீசார் குவிப்பு பீதியால் குறையும் ரசிகர்கள் வருகை
பாரிஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை நடக்கவுள்ள பிரான்ஸ் – இஸ்ரேல் இடையிலான ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து போட்டிக்கு 4,000 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிடக் கூடும் என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
கடந்த வாரம், நெதர்லாந்தில் நடந்த கால்பந்து ஆட்டத்தில் இஸ்ரேல் அணி பங்கேற்கும் போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
அப்போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் திடீரென திரண்டு வந்து, இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பதற்றம் நிலவியது.
அங்கிருந்த போலீசார், இஸ்ரேல் ரசிகர்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
அவர்களை மீட்க இரு விமானங்களை அனுப்பும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டிரு்தார்.
இந்நிலையில், பாரிசில் நடக்கும் கால்பந்துப் போட்டியில் இஸ்ரேல் – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் 2500 போலீசார், நகரம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி நடக்கும் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானம், 80 ஆயிரம் பேர் அமரக் கூடியது.
ஆனால், பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிடக் கூடும் என்ற அச்சமும், என்ன ஆகுமோ என்ற பதற்றமும் நிலவுவதாலும், போலீசாரின் கெடுபடிகளாலும் 20 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am