செய்திகள் இந்தியா
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
டெல்லி:
இந்திய விமான நிறுவனம் விஸ்தாரா, 9 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு இன்று அதன் இறுதி விமானப் பயணத்தை மேற்கொள்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் Tata Sons நிறுவனமும் செய்துகொண்ட இணைப்பால் விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைந்தது.
விரிவான கட்டமைப்பையும் கூடுதலான விமானங்களையும் கொண்ட ஒரு நிறுவனத்தை அமைக்கும் முயற்சி அது.
விஸ்தாராவின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஏர் இந்தியா நிர்வகிக்கும்.
விஸ்தாராவின் பயணிகள் விவரங்களை ஏர் இந்தியாவுக்கு மாற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது.
உணவு, பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை இரண்டு நிறுவனங்களின் அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக ஏர் இந்தியாவின் பேச்சாளர் கூறினார்.
ஆயினும் விஸ்தாரா விமானத்தில் கிடைக்கும் அனுபவம் மாறாது என்று நிறுவனம் உறுதியளித்தது.
உணவு, சேவை, தரம் ஆகியவற்றில் விஸ்தாராவின் மீது வாடிக்கையாளர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. அதன் சேவைகளை நிறுத்த எடுக்கப்பட்ட முடிவு பலருக்கும் வருத்தமளித்தது.
விஸ்தாரா நிறுவனம் சந்தித்த இழப்புகள் காரணமாக அதை ஏர் இந்தியாவுடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 13, 2024, 12:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm
முடித்திருத்தகங்களில் பெண்களுக்கு ஆண்கள் சேவை செய்யக் கூடாது: உ.பி. அரசுக்கு பரிந்தரை
November 9, 2024, 4:28 pm
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
November 9, 2024, 11:45 am
அதிர்ஷ்ட காருக்கு 4 லட்ச ரூபாய் செலவில் இறுதி ஊர்வலம்:விவசாயியின் வினோத பாசம்
November 8, 2024, 7:00 am
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
November 8, 2024, 6:54 am