செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகராப்பூர்வப் பயணமாக எகிப்திற்கு பயணமானார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகராப்பூர்வப் பயணமாக நான்கு நாட்கள் எகிப்து சென்றுள்ளார்.
மலேசியாவிற்கும் எகிப்து நாட்டிற்கும் இடையிலான அரசத் தந்திர உறவின் முக்கியத்தை இந்தப் பயணம் உணர்த்துவதாக எகிப்துக்கான மலேசியத் தூதர் முஹம்மத் தாரிட் சுஃபியான் தெரிவித்தார்.
எகிப்து அதிபர் Abdel Fattah El-Sisi-யின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் அங்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணம் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை ஆராய்வதற்கான ஒருங்கிணைந்த அடிப்படையையும் ஒத்துழைப்பை பன்முகப்படுத்தவும் வலுப்படுத்தவும் வாய்ப்பளிக்கும்.
பிரதமர் இன்று மலேசிய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு எகிப்து சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிரதமர் அன்வாரை எகிப்து அதிபர் Abdel Fattah El-Sisi, Al Ittihadiya அரண்மனையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவில் வரவேற்கிறார். தொடர்ந்து இருதரப்பு சந்திப்பு நடைபெறும்.
வர்த்தகம் மற்றும் முதலீடு,பாதுகாப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் மத விவகாரங்கள் ஆகிய துறைகளில் அதிகரித்த ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் அமர்வு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹலால் தொழில், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் புதிய ஒத்துழைப்புகளை ஆராய்வது குறித்த விவாவதங்களும் இடம்பெறவுள்ளன.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன்கள், குறிப்பாக பாலஸ்தீன மோதல்கள் தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தரிட் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 11, 2024, 8:08 pm
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்
December 11, 2024, 8:05 pm
மருத்துவ கல்வி பயில்வதற்கு 50 மாணவர்களுக்கு மித்ரா கை கொடுக்கும்: பிரபாகரன்
December 11, 2024, 4:57 pm
அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் காணாமல்போன பக்கங்கள்: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கேள்வி
December 11, 2024, 3:41 pm
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
December 11, 2024, 12:39 pm
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
December 11, 2024, 12:38 pm
100 மில்லியன் மரங்கள்: மலேசியா சாதனை
December 11, 2024, 12:37 pm