நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா 2024: டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் உள்ள இந்திய இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாகவும் அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கவும் மலேசிய தமிழ்க் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் மிக பிரம்மாண்டமான ஏற்பாட்டில்  மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா 2024 நடைபெறவுள்ளது 

மலேசிய இந்திய இசைக்கலைஞர்களின் விருது விழா 2024 எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணி தொடங்கி ஷா ஆலாமில் உள்ள TSR CONFERENCE HALL இல் நடைபெறவுள்ளது 

இந்த விருது விழாவிற்கு ம.இ.கா தேசிய தலைவர் மதிப்புமிகு டான்ஶ்ரீ, டத்தோஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். மேலும், டான்ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் மலேசிய மண்ணில் நீண்ட காலமாக இசைத் துறையில் பங்காற்றியுள்ள இசைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். 

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற கலையின்பால் பற்று கொண்ட அனைத்து அன்புள்ளங்களும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு மலேசியத் தமிழ்க் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநில தலைவரும் விருது விழாவின் ஏற்பாட்டு குழு தலைவருமான விக்னேஸ்வர் பாலசந்தர் கேட்டு கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset