நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கருப்புப் பணம்: இந்தியர்களின் பட்டியல் ஸ்விஸ் வங்கி வழங்கியுள்ளது - விவரங்களை வெளியிட இந்தியா மறுப்பு

புது டெல்லி:

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விவரங்களைக் கொண்ட மூன்றாம் கட்ட பட்டியலை ஸ்விட்சர்லாந்து அரசு இந்திய அரசிடம் வழங்கியுள்ளது.  ஆனால் அந்த விவரங்களை வெளியிட இந்திய அரசு மறுத்துள்ளது

ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகள், வாடிக்கையாளர்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருமானத்தில் வராத கருப்புப் பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனர்.  

Indian funds in Swiss banks rose over ₹20,000 crore? Centre refutes claim |  Latest News India - Hindustan Times

இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய முதல் பட்டியல் கடந்த 2019-இலும், 2ஆம் பட்டியல் கடந்த ஆண்டிலும் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டது. மூன்றாம் பட்டியலில், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று, வங்கிக் கணக்கில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ரகசியத்தன்மை: ஸ்விட்சர்லாந்தில் வீட்டு மனைகளை வாங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்களை நடப்பாண்டில் முதல் முறையாக அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

அவர்களுடைய பெயர்களை வெளியிட இந்திய ஒன்றிய அரசு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset