நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூக விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க டத்தோஶ்ரீ ரமணனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது

கோலாலம்பூர்:

இந்திய சமூக விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரான டத்தோஶ்ரீ ரமணன் ஓர் அறிக்கையின் வாயிலா தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தலைமையில் கடந்த வாரம் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மித்ராவின் நிர்வாகத்துடனும், இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய சமூகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துகள், ஆலோசனைகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெற்றது.

இச்சிறப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் இந்திய சமூகம் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைத்து அதிகரிக்குமாறு தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சை பிரதமர் அறிவுறுத்தினார்.

இதன் வாயிலாக சமூகத்திற்கான பட்ஜெட் 2025 ஒதுக்கீடு அதன் இலக்குகளை அடைவதை உறுதி செய்யும் பொறுப்பும் தமக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 பட்ஜெட், மித்ரா உட்பட இந்திய சமுகத்தின் பிரச்சினைகளுக்கு மக்களவையில் பதிலளிக்க  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset