நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வக்பு மசோதா கூட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் ஆஜரானதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புது டெல்லி:

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் அழைக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தக் கூட்டங்களில் கருத்து தெரிவிக்க ஹிந்துக்களுக்காக பணியாற்றும் அமைப்புகள் உள்பட மசோதாவுக்கு சம்பந்தமில்லாத முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் நிர்வாகிகள் ஆஜரானதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அந்தக் கூட்டங்களில் அவ்வப்போது கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

மேலும் தில்லி முதல்வர் அதிஷியின் ஒப்புதல் இல்லாமல், கூட்டுக் குழுவிடம் தில்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திமுக எம்.பி. முகமது அப்துல்லா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset