
செய்திகள் விளையாட்டு
பலோன் டி ஓர் கால்பந்து விருதை ரோட்ரி வென்றார்: ரியால்மாட்ரிட் விழாவை புறக்கணித்தது
பாரிஸ்:
உலகின் சிறந்த கால்பந்து வீருக்கான பலோன் டி ஓர் கால்பந்து விருதை ரோட்ரி வென்றார்.
மென்செஸ்டர் சிட்டி, ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரரான ரோட்ரி நான்காவது முறையாக இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தையும் யூரோ 2024 கிண்ணத்தையும் வென்றது மூலம் இவ்விருதை தட்டிச் சென்றார்.
அதே வேளையில் ரியல்மாட்ரிட் கிளப் இந்த விழாவை முழுமையாக புறக்கணித்துள்ளது.
காரணம் உலகின் சிறந்த வீரருக்கான பரிசை ஒரு தற்காப்பு ஆட்டக்காரருக்கு வழங்குவதற்கான முடிவு சற்றே ஆச்சரியமாக இருந்தது.
லா லீகா, சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் ரியல்மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் விழாவிற்கு முன் பட்டியலில் முன்னணியில் காணப்பட்டார்.
இந்நிலையில் பாரிஸில் நடந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ரியால்மாட்ரிட் கிளப் அதன் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தது.
இதனால் வினிசியஸ் ஜூனியர் வெற்றி பறிக்கப்பட்டது.
28 வயதான ரோட்ரி, கடந்த சீசனில் பிரிமியர் லிக் கிண்ணத்தை வெல்வதற்கான அர்செனலின் சவாலை முறியடித்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் யூரோ 2024 இல் ஸ்பெயின் ஜெர்மனியில் சாம்பியனாக உருவெடுத்ததால் போட்டியின் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am