நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மில்லியன் பயிற்சித் திட்டங்களுக்காக எச்ஆர்டி கோர்ப்பின் வாயிலாக 3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்

கோலாலம்பூர்:

மூன்று மில்லியன் பயிற்சித் திட்டங்களுக்காக எச்ஆர்டி கோர்ப்பின் வாயிலாக 3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் மக்களவையில் இன்று மாலை தாக்கல் செய்தார்.

இதில் எச்ஆர்டி கோர்ப் வாயிலாக 3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்..

இதன் மூலம் 3 மில்லியன் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும் பெறப்பட்ட லெவி கட்டணம் மூலமாக மடானி தொழிற் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படும்.

லெவி கட்டணம் முதலாளிமார்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் சூழல் இருந்தாலும்,

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெறும் பட்டதாரிகள் 1,000 ரிங்கிட் அலவன்ஸ் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset