நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு  130 மில்லியன் ரிங்கிட் மட்டும் ஒதுக்கியுள்ளார் என்பது தவறான புரிதல்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பிரதமர் பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் ஒதுக்கியுள்ளார் என்பது தவறான புரிதல்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

பிரதமரின் இந்த பட்ஜெட் ஒரு மகத்தான பட்ஜெட்டாகும்.

நாட்டின் பொருளாதார மேம்பாடு, மக்களின் வளர்ச்சி, சமூக நலன் உட்பட அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு பிரதமர் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 130 மில்லியன் ரிங்கிட் பிரதமர் ஒதுக்கியுள்ளார்.

இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும்தானா என ஒரு சிலர் நினைக்கலாம். இதுவொரு தவறான புரிதல் ஆகும்.

காரணம் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்திய சமுதாயத்திற்கும் பயனளிக்கும்.

உதாரணத்திற்கு பள்ளிகளுக்கு என மொத்தமாக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளார்.

இது தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பயனளிக்கும்.

கல்வித் துறைக்கு தான் மிகப் பெரிய நிதியை ஒதுக்கியுள்ளார். இது அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

ஆகவே ஒதுக்கப்பட்ட நிதியின் வாயிலாக எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை தான் இந்திய சமுதாயம் சிந்திக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset