நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரிசி, பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025க்கான வரவு செலவு அறிக்கையை மக்களவையில் சமர்ப்பித்தார். 

2025-ஆம் ஆண்டில் நாட்டின் கடன் தொகை 80 பில்லியனுக்குக் குறைக்க மடானி அரசு இலக்கு கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார் 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மலேசிய வரலாற்றில் 421 பில்லியனைத் தாண்டிய முதல் பட்ஜட் தாக்கல் இதுவாகும். 

செயல்பாட்டுச் செலவிற்கு 79.6 விழுக்காடு அதாவது RM335 பில்லியன் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், மேம்பாட்டுச் செலவினங்களுக்காக RM86 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. 

2025ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை காணப்பட்டது

2025 இல் 4.5 சதவீதம் - 5.5 சதவீதம் மற்றும் 2024 இல் 4.8 சதவீதம் - 5.3 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு (SPRM) முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க RM360 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது நிதிகளின் நிர்வாகத்தை “Follow The Public Money Audit” என்ற முறையில் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கும் திருத்தப்பட்ட கணக்கு சட்டத்துக்கு ஏற்ப, தேசிய தனிமை பிரிவுக்கு RM200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமுள்ள பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு  2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

இந்தியர்களுக்கு வணிகம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரிசி, பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது.

சால்மன் மீன், அவகாடோ போன்ற அதிநவீன இறக்குமதி பொருட்களுக்கு மட்டும் விற்பனை வரி விதிக்கப்படும்.

SST-வின் இந்த விரிவாக்கம் 2025 மே 1 முதல் நடைமுறைக்கு வரும். புதிய வரி மூலம் கிடைக்கும் வருவாய், பொதுமக்களுக்கு பண உதவிகளை அதிகரிப்பதற்கும், கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

-  ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset