நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு கிள்ளானில் போதுமான கார் நிறுத்துமிடம் இல்லை; தீபாவளி நேரத்தில் அபராதம் செலுத்துவதற்கே பணம் செலவாவதால் மக்கள் அவதி: டத்தோ கலைவாணர்

கிள்ளான்:

தெங்கு கிள்ளானில் பொதுமக்களுக்கு போதுமான கார் நிறுத்துமிடம் இல்லை. இதனால் தீபாவளி நேரத்தில் அபராதம் செலுத்துவதற்கே பணம் செலவாவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் கூறினார்.

இம் மாத இறுதியில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இதனால் இந்திய மக்கள் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தெங்கு கிள்ளானில் அதிகமான மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் இப்பகுதியில் போதுமான கார் நிறுத்தும் இடம் இல்லை. இதனால் மக்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகிறது.

இதனால் அவர்களின் கார்கள் இழுத்து செல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 450 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தி கார்களை மக்கள் மீட்டு வருகின்றர்.

குறிப்பாக தீபாவளி காலத்தில் அபராதம் செலுத்துவதற்கே மக்களின் பணம் செலவாகிறது.

இதன் அடிப்படையில் தான் வரும் திங்கட்கிழமை கிள்ளான் மக்களுடன் கிள்ளான் மாநகர் மன்றத்தில் மகஜர் வழங்கவுள்ளோம்.

பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு வழங்க வேண்டும்.

தெங்கு கிள்ளானில் தீபாவளி நேரத்தில் கார்கள் இழுக்கப்படக்கூடாது. அபராதம் விதிக்கப்படக்கூடாது.

இதனை வலியுறுத்தியே இம்மகஜர் வழங்கப்படும் என்று டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset