
செய்திகள் விளையாட்டு
முதல் தகுதி சுற்றுப் போட்டி: சென்னை – டெல்லி அணிகள் இன்று பலபரீட்சை
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் முடிவடைந்தன. போட்டிகளின் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மற்ற அணிகளான நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் வெளியேறின. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி, இன்று நடக்கிறது.
இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது. சென்னை அணி, கடைசியாக சந்தித்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் இன்றைய போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். டெல்லி அணி, லீக் சுற்று போட்டியில் இரண்டு முறையும் சென்னையை புரட்டி எடுத்திருக்கிறது என்பதால் இன்று அதே தெம்புடன் விளையாடும்.
சென்னை அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பான தொடக்க தருகின்றனர். இவர்கள் சொதப்பினால் அடுத்து வரும் வீரர்களும் தடுமாறுகின்றனர். மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ராயுடு, தோனி என அனைவரும் பேட்டிங்கில் தடுமாறுகின்றனர்.
கடைசிகட்டத்தில் ஜடேஜா மிரட்டுகிறார். பந்துவீச்சிலும் சில போட்டிகளில் சிறப்பாகவும் சில போட்டிகளில் மோசமாகவும் செயல்படுகிறது சென்னை அணி. பழைய தவறுகளில் இருந்து மீண்டால், இன்றைய போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும்.
டெல்லி அணியில் ஷிகர் தவான், பிருத்வி ஷா, கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் சிறப்பான பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ்கான், அக்ஷர் பட்டேல், ரபடா, அஸ்வின் மிரட்டுகிறார்கள். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளை (11 ஆம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும்.
வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதும். இந்தப் போட்டி 13- ஆம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 15-ஆம் தேதி துபாயில் நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am
பிபா கிளப் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி - செல்சி மோதல்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am