நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன்  காலமானார் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் சனிக்கிழமையன்று (அக்டோபர் 12) காலமானார்.

அவருக்கு வயது 60. ‘சிவாஜி’ அசோகன், மறைந்த பிரபல நடிகர்கள் எம்ஜிஆர், எம்ஆர் ராதா போன்றவர்களைப் போல் நடிக்கக்கூடியவர். அதிகமாக அசோகன், சிவாஜி கணேசனின் பாடல்களுக்கு சிவாஜி போல பாவனை செய்தும், சிவாஜி நடித்த படக் காட்சிகளை நடித்துக் காட்டியும் சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் புகழ் பெற்றார். அதனால் ரசிகர்கள் அவரை ‘சிவாஜி’ அசோகன் என்று அழைத்தனர்.

சனிக்கிழமை மாலை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், மேடையில் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு ‘சிவாஜி’ அசோகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset