நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக 50 மருத்துவர்கள் ராஜினாமா

கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 50 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். அந்த ராஜிநாமாவை அரசு ஏற்கும் வரை, தாங்கள் பணியாற்றுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மாநில சுகாதாரத் துறையில் நடைபெறும் ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் மீண்டும் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இளநிலை மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 50 மூத்த மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset