நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி எதிர்பாராதது: மல்லிகார்ஜுன கார்கே

புது டெல்லி:

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி எதிர்பாராதது என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரித்துள்ளார்.

10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெற்ற ஹரியாணாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக இருந்தன.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், ஹரியாணா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது. தொண்டர்களுடன் ஆலோசித்து முழுமையான தகவல்களை பெற்று, தோல்வி குறித்து கட்சி விரிவாக பதிலளிக்கும்.

சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்.

காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த  ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி. ஜம்மு காஷ்மீர் மக்களின் கனவுகளை முழுமையாக நிறைவேற்ற எங்கள் கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset