நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போயிங் 737 விமானத்தின் கட்டுப்பாட்டு கருவியில் கோளாறுக்கான வாய்ப்பு

புது டெல்லி:

போயிங் 737 விமானத்தின் பின் இறக்கை உள்ள rudder (ரட்டர்) கட்டுப்பாட்டு கருவிகளில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் DGCA வெளியிட்டது.

அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்  இந்தக் கோளாறை கண்டுபிடித்தது. இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ள போயிங்737 விமானங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் போயிங்737 விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாஷா ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.

அதில்,  இந்தப் பிரச்சனைகளுக்கு தேவையான பயிற்சிகளை விமான தொழில்நுட் நிபுணர்களுக்கு  வழங்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள கோளாறுகளை முன்கூடிய சரிசெய்ய வேண்டும்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை கடும் பனி சூழ்ந்த பகுதிகள், காண்பு திறன் குறைவுடைய பகுதிகளில் விமானங்களை தரையிறக்கப் பயன்படுத்தப்படும் பிரிவு 3பி தொழில்நுட்பத்தை போயிங்737 விமானங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset