நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஸ்ரீநகர்: 

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி - 50, பாஜக - 27, பிடிபி - 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. 

ஆரம்ப நிலையில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. படிப்படியாக வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போதைய தரவுகளின்படி காங்கிரஸ் கூட்டணி - 48, பாஜக - 29, பிடிபி - 4, பிற கட்சிகள் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 

தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவர் ஒமர் அப்துல்லா அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset