நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியாணாவில் பாஜக முன்னிலை 

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்பதையே பிற்பகல் வரையிலான தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

ஹரியாணாவில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வாக்கு கணிப்புகளை பொய்யாக்கி பாஜக  பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது. 

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் இந்திய முன்னாள் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் 5909 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அவர் தற்போது வெற்றிப்பெற்றுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset