செய்திகள் விளையாட்டு
அனைத்துலக ஓட்டத்தில் அநாகரீகம், ஆபாசமாக நடந்து கொண்ட மூவர் கைது: குமார்
ஜொகூர்பாரு:
அனைத்துலக ஓட்டப் போட்டியில் அநாகரீகத்துடனும் ஆபாசமாகவும் நடந்து கொண்டதாக நம்பப்படும் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஜொகூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ எம். குமார் இதனை உறுதிப்படுத்தினார்.
பேன் ஆசியா அனைத்துலக ஓட்டப் போட்டி கோத்தா திங்கியில் நடைபெற்றது.
இந்த போட்டியின் போது பலர் அநாகரீக, ஆபாசமாக நடந்து கொண்டதாக போலிசாருக்கு புகார் கிடைத்தது.
இப் புகாரின் அடிப்படையில் போலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு வெளிநாட்டவர்களும் 39 முதல் 70 வயதுடைய மற்றொரு உள்ளூர் நபரும் கோத்தா திங்யில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
கோத்தா திங்கி போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டத்தின் போது அவர்கள் அணிந்திருந்த அல்லது பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆடைகள், அணிகலன்கள், சிவப்பு புடவை, சிவப்பு பாவாடை உட்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 9:54 am
2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்
March 6, 2026, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி
March 5, 2026, 8:50 pm
7 வீரர்களுக்கு 12 மாதங்கள் இடைநீக்கம்: CAS தீர்ப்பு
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:40 am
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
March 4, 2026, 9:36 am
