நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை

லண்டன்: 

ஸ்பெயினைச் சேர்ந்த மோட்டோஜிபி நட்சத்திரமான மார்க் மார்க்வெஸ், 2026 ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதில் “உலகின் சிறந்த ஆண் வீரர்” பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலகின் பிரபல வீரர்களான 'Carlos Alcaraz' (டென்னிஸ்), 'Ousmane Dembele' (கால்பந்து), 'Mondo Duplantis' (தடகளம்), 'Tadej Pogacar' (சைக்கிள் பந்தயம்), Jannik Sinner (டென்னிஸ்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

“இது எனது ஆறாவது லாரியஸ் விருது பரிந்துரையாக இருந்தாலும் 12 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்டபோது இருந்த அதே உற்சாகத்தை இன்னும் உணர்கிறேன்.

“இந்தப் பட்டியலில் உள்ள வீரர்களின் தரம், இந்த விருது எவ்வளவு சிறப்பானது என்பதைக் காட்டுகிறது. சிறந்த வீரர்களுடன் இணைந்து இடம் பெற்றதில் மகிழ்ச்சி,” என்று மார்க்வெஸ் கூறினார்.

மார்க்வெஸ் 2013 ஆம் ஆண்டு ‘Breakthrough of the Year’ விருதை வென்றுள்ளார். மேலும், 2015, 2020 ஆம் ஆண்டுகளில் “உலகின் சிறந்த ஆண் வீரர்” பிரிவிலும், 2022, 2025 ஆம் ஆண்டுகளில் ‘Comeback of the Year’ பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான காயங்கள், குறைவான போட்டித்திறன் கொண்ட இயந்திரம் காரணமாக ஸ்பானிஷ் பந்தய வீரர் கடினமான காலகட்டத்தைக் கடந்து, டுகாட்டி லெனோவா அணியுடன் தனது முதல் சீசனில் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் மோட்டோஜிபியின் அடையாளம் இல்லாத ஐந்து ஆண்டுகால வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

“அது எனக்கு மகிழ்ச்சியானதோடு சவாலான ஆண்டாகவும் இருந்தது. உச்ச நிலைக்கு திரும்ப நீண்ட காலம் காத்திருந்தேன். கடந்த சீசனில் பட்டம் வெல்ல அபாரமான முயற்சி தேவைப்பட்டது.

“இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. டென்னிஸ், கால்பந்து, தடகளம், சைக்கிள் பந்தய வீரர்களுடன் இணைந்து இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்படுவது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக உள்ளது,” என்றார் அவர்.

இதுவரை, மோட்டோஜிபியிலிருந்து மூன்று வீரர்களான 'Michael Schumacher' (2002, 2004), 'Sebastian Vettel' (2014), 'Lewis Hamilton' (2020) இந்த “உலகின் சிறந்த ஆண் வீரர்” விருதை வென்றுள்ளனர். 

கடந்த ஆண்டு இந்த விருதைக் உயரம் தாண்டுதல் வீரர் டூப்லாண்டிஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset