செய்திகள் விளையாட்டு
போர் பதற்றம்: சவூதியை விட்டு வெளியேறினார் ரொனால்டோ
ரியாத்:
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதுகாப்பு காரணங்களுக்கான சவூதி அரேபியாவை விட்டு வெளியேறியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இதை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ரொனால்டோ தனது தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் ரியாதில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்குச் சென்றதாக தெரிகிறது.
சுமார் 320 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தில் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறியதாக தகவல் கூறுகிறது.
Flightradar24 தரவுகளின்படி, அவரது விமானம் ரியாத்திலிருந்து கிளம்பி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்குச் சென்றுள்ளது.
இருப்பினும், ரொனால்டோ அந்த விமானத்தில் இருந்தாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளிவரவில்லை.
ஈரான், இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் உட்பட பல விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ரொனால்டோவின் அல் நசர் அணியின் போட்டிகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 9:54 am
2026 டிசம்பருடன் ஓய்வு பெறும் நெய்மர்: சோகத்தில் ரசிகர்கள்
March 6, 2026, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் தோல்வி
March 5, 2026, 8:50 pm
7 வீரர்களுக்கு 12 மாதங்கள் இடைநீக்கம்: CAS தீர்ப்பு
March 5, 2026, 2:57 pm
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் அணி வாகை சூடியது
March 5, 2026, 2:12 pm
ஜொகூர் தாருல் தாசிம், ஹிரோஷிமாவில் வெற்றி ஓட்டத்தை தொடர தயார்: ஜிஸ்கோ முனோஸ்
March 5, 2026, 9:32 am
ரொனால்டோவுக்கு காயம்
March 5, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 4, 2026, 5:12 pm
'Marc Marquez' உலகின் சிறந்த ஆண் வீரர் விருதுக்கு பரிந்துரை
March 4, 2026, 9:36 am
