
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வக்ப் திருத்த மசோதா 2024ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை:
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள வக்ப் திருத்த மசோதா 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டார்கள்.
கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி ஏ காஜா மொய்னுதீன் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லானா பசூலுர் ரஹீம் முஜத்திதி சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்கள்.
இப் போராட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை குழுவின் தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா எம்.பி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஆர் சச்சிதானந்தம். எம்.பி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் க சுப்பராயன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, எம்எல்ஏ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தமிழ்நாட்டின் தலைவர் மவலவி ஹனிபா மன்பஈ, எஸ்டிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் அ ச உமர் பாரூக் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் - இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது
இந்த மசோதாவில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எடுத்துக்காட்டப்பட்டது
- வக்ப் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி இந்த திருத்த மசோதா வக்ப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கின்றது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.
வக்ப் வாரியங்களை முடக்கி வக்ப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ப் திருத்த மசோதா 2024 திரும்பப் பெறப் பட வேண்டுமென ஒற்றை குரலில் பங்கு கொண்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm
செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
September 9, 2025, 12:07 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
September 8, 2025, 6:16 pm