
செய்திகள் மலேசியா
லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஆடவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன
லங்காவி:
லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த ஆடவரைத் தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லங்காவி தீயணைப்புப் படையில் இயக்குநர் முகமத் ஜம்ரி அப்துல் கனி இதனை கூறினார்.
இங்குள்ள மச்சின்சாங் மலையில் உள்ள கேபிள் கார் பராமரிப்பு பணியில் 41 வயதுடைய கைருல் நிஷாம் ஈடுப்பட்டு வந்தார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 முதல் 50 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் நிலை கண்டறியப்படவில்லை.
மேலும் தீயணைப்பு படையினர் தற்போது அந்த இடத்தில் தேடுதல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm