நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலில் தேமு தனித்து போட்டியிடுவதற்கு நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்: ஆய்வாளர்

கோலாலம்பூர்:

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து போட்டியிடுவதற்கு டத்தோஸ்ரீ நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்.

நூசாந்தரா அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர் அஸ்மி ஹசான் இதனை
தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மீதான ஜசெகவின் நிலைப்பாடு அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை அதன் சொந்தப் பாதையை எடுக்கத் தள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மேலும் நம்பிக்கை கூட்டணியுடன் மீண்டும் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தேசிய முன்னணியின் முக்கியக் கட்சியான அம்னோ, கெஅடிலான், அமானாவுடன் நல்லுறவைப் பேண வாய்ப்புள்ளது,

ஆனால் ஜசெகவுடன் வெளிப்படையாக விரோதமாக இருக்கும்.

கெஅடிலான், ஜசெக, அமானா ஆகியவை நநம்பிக்கை கூட்டணியில் கூறுகள்.

நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி ஆகியவை ஒற்றுமை அரசாங்கத்தில் கூட்டாளிகளாக உள்ளன.

இதன் பொருள் இப்போது தேசிய முன்னணி, ஜிஆர்எஸ் இடையேயான உறவைப் போலவே, அம்னோவும் ஜசெகவும் இறுதியில் கூட்டாளர்களாக மாற வேண்டியிருக்கும் என்று அஸ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset