செய்திகள் மலேசியா
ஜாஹித் ஹமிடியின் இறுதி எச்சரிக்கை ஆணவமானது: மஇகா தலைவர்கள் கண்டனம்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் இறுதி எச்சரிக்கை என்பது மிகவும் ஆணவமானது என்று மஇகா தலைவர்கள் சாடியுள்ளனர்.
மஇகா தனது எதிர்காலத்தை தானாகவே தீர்மானிக்கத் தவறினால் கூட்டணி நேரடியாக தலையிடக்கூடும் என்ற தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறியுள்ளார்.
ஜாஹித் அத்தகைய அறிக்கையை வெளியிடுவது நியாயமற்றது.
காரணம் மஇகா 60 ஆண்டுகாலமாக தேசிய முன்னணியின் விசுவாசமான நண்பர் ஆகும்.
கூட்டணியின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான மஇகாவின் முடிவு, மாறிவரும் அரசியல் சூழ்நிலையில பொருத்தமானதாக இருக்க ஒரு முயற்சி மட்டுமே என்று அவர்கள் கூறினர்.
தேசிய முன்னணி அதன் தற்போதைய நிலையில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நம்பி ஜாஹித் கனவு காண்கிறார்.
இந்த உலகில் எந்தப் பேரரசும் என்றென்றும் நிலைக்காது. ரோமன், ஒட்டோமான், பிரிட்டிஷ் அல்லது பிற பேரரசுகள் இதற்கு எடுத்துக்காட்டு.
எனவே, தேசிய முன்னணி அதன் தற்போதைய நிலையில் என்றென்றும் நிலைத்திருக்க விரும்பினால் அது வெறும் கனவு மட்டுமே என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.
மஇகா தனது திசையில் வேறு வழிகளைக் கருத்தில் கொள்ள விரும்புவதற்கான அடிப்படை காரணம் இதுவாகும்.
அனைத்து தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளிலும், சரியான நேரத்தில், அதாவது இப்போது, பரிணாம வளர்ச்சியின் அவசியத்தைப் புரிந்துகொண்ட ஒரே கட்சியாக மஇகா தனித்து நிற்கிறது.
மஇகா தனது பரிணாம வளர்ச்சி குறித்த பார்வையை அதன் தேசிய முன்னணி கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் 'கௌரவம்' அடைந்து.
ஆனால் அர்த்தமுள்ள விவாதங்களைத் தடுப்பதில் ஜாஹித்தின் ஈகோவே முக்கிய காரணம் என்று நெல்சன் கூறினார்.
இதனிடையே ஜாஹித்தின் அறிக்கை சர்வாதிகாரமானதாகும்.
மேலும் கூட்டணி தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதால், மஇகாவை அப்படி நடத்துவது சரியல்ல என்று மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் கூறினார்.
ஜாஹித்தின் தரப்பில் இது ஆணவம், இன்று தேசிய முன்னணி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
அவரது பலவீனமான தலைமை விரைவில் தேசிய முன்னணியை மூழ்கடிக்கும். அவர் தேசிய முன்னணிக்கு சுமையாக கருதப்படுகிறார்.
மேலும் அவர் பதவி விலக வேண்டிய நேரம் இது. அவர் இல்லாமல், தேசிய முன்னணி இழந்த ஆதரவை மீண்டும் பெற்று முன்பு போலவே வலுவாக மாற முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 12:00 pm
1 எம்டிபி வழக்கு: அரபு நன்கொடை கடிதம் போலியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
December 26, 2025, 11:24 am
1 எம்டிபி வழக்கு: நஜிப்பிற்கு ஆதரவாக பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் கூடினர்
December 26, 2025, 10:27 am
16ஆவது பொதுத் தேர்தலில் தேமு தனித்து போட்டியிடுவதற்கு நஜிப் விவகாரம் முக்கிய காரணமாக இருக்கலாம்: ஆய்வாளர்
December 26, 2025, 10:25 am
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குப்பைகளை கொட்டும் அவலம்; நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்: ங்கா
December 26, 2025, 10:24 am
8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை மலேசிய கால்பந்து சங்கம் எதிர்கொள்கிறது
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
