நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை மலேசிய கால்பந்து சங்கம் எதிர்கொள்கிறது

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய கால்பந்து சங்கம் 8 மில்லியன் ரிங்கிட் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஏழு குடியுரிமை பெற்ற வீரர்களைப் பயன்படுத்தியதற்காக பிபா தண்டனை விதித்தது.

இதைய் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கம் 8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

நிர்வாகக் குழுவிற்கு பிபா 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்தது.

மேலும் இப்போது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்துப் போராட அதிக சட்டச் செலவுகளையும் எதிர்கொள்கிறது.

எப்ஏஎம் தாக்கல் செய்வதற்கான கட்டணம், சட்ட சேவைகள், விதிக்கப்பட்ட அசல் அபராதங்களுக்காக 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது அல்லது செலவிடும்.

மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள அபராதங்கள், வீரர்களின் இடைநீக்கம், சந்தை மதிப்பில் சரிவு, ஹரிமாவ் மலாயாவின் தரவரிசையில் ஏற்படக்கூடிய சரிவு ஆகியவை மலேசிய கால்பந்து சங்கத்தை உண்மையில் உலுக்கியுள்ளன என விளையாட்டு விமர்சகர் டத்தோ டாக்டர் பெக்கான் ரம்லி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset