நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குப்பைகளை கொட்டும் அவலம்; நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்: ங்கா

கோலாலம்பூர்:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் குப்பைகளை கொட்டுவதன் வாயிலாக நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்.

வீட்டு வசதி, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை எச்சரித்தார்.

கண்மூடித்தனமாக குப்பைகளை கொட்டுவதன் மூலம் நாட்டை அவமானப்படுத்த வேண்டாம்.

கோலாலம்பூரின் புக்கிட் பிந்தாங்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பிறகு தெருக்களில் குப்பைகள் கொட்டப்படுவதைக் காட்டும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.

பொறுப்பற்ற நடத்தை மிகவும் வெட்கக்கேடானது என்று ங்கா விவரித்தார்.

இது 21 ஆம் நூற்றாண்டு, பொது இடங்களில் யாரும் தங்கள் விருப்பப்படி குப்பைகளை வீசுவதற்கு இனி எந்த சாக்குப்போக்கும் இல்லை.

நாம் சட்டத்தின் சக்தியாக இருக்கும்போது அரசாங்கத்தைக் குறை கூறாதீர்கள்.

தயவு செய்து முதிர்ச்சியடையுங்கள் என்று அவர் சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset