
செய்திகள் மலேசியா
இவ்வாண்டு வசூலிக்கப்பட்ட லெவிக் கட்டணத்தில் 82 சதவீதத்தை எச்ஆர்டி கோர்ப் பயன்படுத்தியுள்ளது: டத்தோ வீரா ஷாகுல்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப் இவ்வாண்டு முதலாளிகளிடம் இருந்து வசூலித்த லெவி கட்டணத்தில் 82 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளது.
எச்ஆர்டி கோர்ப் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
இந்த வரியின் ஒரு பகுதி ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட தேசிய பயிற்சி வாரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
மேலும் இன்று முடிவடைந்த தேசிய மனிதவள மூலதன மாநாடு, கண்காட்சி உட்பட பல மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்பட்டது.
2024ஆம் ஆண்டிற்கான லெவி பயன்பாடு 82 சதவிகிதம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இதற்குக் காரணம் ஒவ்வொரு முதலாளியும் பயிற்சி முக்கியம் என்று நம்புகிறார்கள்.
மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தேசிய மனிதவள மூலதன மாநாடு, கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்.
நாட்டில் லெவி கட்டண வசூலை அதிகரிப்பதற்கு எச்ஆர்டி கோர்ப் உறுதிபூண்டுள்ளது.
மலேசியாவின் மனித மூலதனத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு பயிற்சி நடத்த இது பயன்படும் என்றும் ஷாகுல் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm