நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவே மருத்துவ பரிசோதனைகள்; இந்திய சமூகம் அலட்சியம் கொள்ளக்கூடாது: டாக்டர் சத்தியா ஸ்ரீராம்

கோலாலம்பூர்:

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவே மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதனால் இந்திய சமூகம் இதில் அலட்சியம் கொள்ளக்கூடாது என்று சென்னை அபோல்லோ மருத்துவமனையின் சுகாதார பாதுகாப்பு பிரிவின் தலைமை இயக்குநர் டாக்டர் சத்தியா ஸ்ரீராம் கூறினார்.

நம் மக்கள் நோய் வந்த பின்பே மருத்துவரை தேடிச் செல்கின்றனர்.

ஆனால் அந்நோயை வர விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை.

இதனால் அவர்களுக்கு நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதன் அடிப்படையில் தான் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள் என்று கூறினால் அதற்கு பலர் அதிருப்திகளை தெரிவிப்பார்கள்.

உங்களை பாதுகாத்துக் கொள்வதற்குதான் மருத்துவ பரிசோதனைகள். இதில் யாரும் அலட்சியம் கொள்ளக் கூடாது.

இதனை அடிப்படையாக கொண்டு தான் சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு கேக்கேட்ஜ் கீழ் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதார பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வரும் மலேசியர்களுக்கு வழிகாட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது.

கூட்டரசுப் பிரதேச மஇகா ஏற்பாட்டில் சுகாதார பரிசோதனையின் முக்கியத்துவம் எனும் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இக் கலந்துரையாடலில் பேசிய டாக்டர் சத்தியா ஸ்ரீராம் இதனை கூறினார்.

முன்னதாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இக் கலந்துரையாடலை தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset