நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் நுழைகிறது 7-Eleven கடைகள்; இஷா அம்பானி திறக்க இருக்கிறார்

மும்பை:

இந்தியாவில் 7-Eleven சில்லறை வர்த்தகக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

ஆசியாவின் ஆகப் பெரும் செல்வந்தரான திரு. முகேஷ் அம்பானியின் நிறுவனக் குழுமமான Reliance, அந்தச் சில்லறை வர்த்தகக் கடைகளை இந்தியாவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

உலகின் ஆகப் பிரபலமான கடைகளில் ஒன்றாக 7-Eleven கடைகள் திகழ்வதை குழுமத்தின் நிறுவனரும் திரு. முகேஷின் மகளுமான இஷா அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

7-Eleven Malaysia | Always There For You - YouTube

முதல் கடை மும்பையின் புறநகர்ப் பகுதியில் திறக்கப்படும். அதையடுத்து, கூடிய விரைவில் மற்ற குடியிருப்பு வட்டாரங்கள், வர்த்தகப் பகுதிகள் ஆகியவற்றில் மேலும் பல சங்கிலித் தொடர் கடைகள் திறக்கப்படும் என்றார் திருமதி இஷா அம்பானி .

மக்களுக்கு, வீட்டுக்கு அருகிலேயே, தேவையான பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்வதே எங்களின் நோக்கம் என்று அவர் கூறினார்.

- AFP 

தொடர்புடைய செய்திகள்

+ - reset