நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்டில் உடைபடும் அபாயத்தில் 125 வீடுகள்: சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட வேண்டும்: குடியிருப்பாளர்கள்

பத்துகேவ்ஸ்:

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்புப் பகுதியில் 125 வீடுகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

ஆகையால், இவ் விவகாரத்தில் மாநில மந்திரி புசார் அமீருதீன் ஷாரி தலையிட வேண்டும் என அப் பகுதி குடியிருப்பாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 1956ஆம் ஆண்டு முதல் இந்த குடியிருப்பு பகுதி உள்ளது. பல தலைமுறைகளை கண்ட குடியிருப்பு பகுதியாக இது உள்ளது.

இங்குள்ள வீடுகள் அனைத்திற்கும் முறையான நிலப்பட்டா உள்ளன. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இப் பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் இங்கு உள்ள 125 வீடுகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைமையேற்ற ஸ்ரீ ரமேஸ் கூறினார்.

சாலை விரிவாக்கம் செய்வது நல்லது தான். ஆனால் அதற்காக பட்டா உள்ள வீடுகளை ஏன் உடைக்கிறார்கள் என்பது அனைவரின் கேள்வியாகும்.

வீடுகள் உடைக்கப்பட்டால் இம்மக்கள் எங்கு போவார்கள். 

அவர்களுக்கு என்ன இழப்பீடு கிடைக்கும்  என்ற கேள்விகளுக்கு மத்தியில் இம் மக்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த விவகாரத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூதீன் ஷாரி தலையிட வேண்டும்.

குறிப்பாக இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் இப் பிரச்சினைக்கு பதில் சொல்ல வேண்டும் என ஸ்ரீ ரமேஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset