நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம்: செனட்டர் சரஸ்வதி

கிள்ளான்:

குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம் என ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

தமிழ் பள்ளி மாணவர்கள் அனைத்து நிலையிலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இன்று இங்கு மாணவன் நிமலன் குமாரின் மர்ம தேசத்தில் ஒரு மந்திர பாட்டி புத்தக வெளியீட்டில் அவர் பேசினார்.

நமது பிள்ளைகளுக்கு தமிழ் பள்ளி தான் ஒரு அங்கீகாரம். தமிழ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஆகையால் தான் தமிழ் பள்ளிகள் தான் இந்தியப் பெற்றோர்களின் ஒரு தேர்வாக இருந்து வருகிறது என்றார் அவர். 

இப்பொழுது தமிழ்ப் பள்ளிகளில் அதிகமான பெண் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் தாய்மை உணர்வோடு மாணவர்களுக்கு கல்வியை கற்றுத் தருகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. 

குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளில் திருக்குறளுக்கு ஆசிரியர்கள் முன்னுரிமை வழங்கி வர வேண்டும். 

திருக்குறளின் நெறிகளை நமது மாணவர்களுக்கு கற்றுத் தருவதால் அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அண்மையில் நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க வேண்டும் என நமது பிரதமரிடம் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அது மிக மகிழ்ச்சியான ஒரு செய்தி என செனட்டர் சரஸ்வதி சுட்டி காட்டினார். 

திருக்குறள் அனைத்து நிலையிலும் நாம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே சிறுவன் நிமலன் குமாரின் கற்பனையை தாம் வெகுவாக பாராட்டுவதாக அவர் சொன்னார். 

இளம் வயதிலேயே இப்படி ஒரு கற்பனை ஆற்றல் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. 
இந்த மாணவனின் கதையை அவர்தம் பெற்றோர்கள் புத்தக வடிவில் கொண்டு வந்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. 

இந்த மாணவனின் அடுத்தக் கட்ட வளர்ச்சி கற்பனையாக இருந்துவிடக் கூடாது. 
இந்த மாணவன் அடுத்த கட்டமாக இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டும். 

இதற்கு இவரின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

நமது இந்திய மாணவர்கள் வருங்கால தலைவர்களாக உருவெடுக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என செனட்டர் சரஸ்வதி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset