நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோழமைக் கட்சிகளின் நிலை குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் முடிவெடுக்கும்: டத்தோஸ்ரீ ஜம்ரி 

கோலாலம்பூர்:

தோழமைக் கட்சிகளின் நிலை குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விரைவில் முடிவெடுக்கும்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.

எதிர்கால திட்டங்களுடன் தேசிய முன்னணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயாராக வேண்டும். தேசிய முன்னணி மீண்டும் வலுப்பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் தோழமைக் கட்சிகளை கூட்டணியில் இணைத்து கொள்வது உட்பட தேசிய முன்னணியின் எதிர்காலம் குறித்து கூட்டணி உச்சமன்றம் விவாதிக்கும்.

அதன்பின்னர் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி உரிய அறிவிப்புகளை செய்வார் என்று டத்தோஸ்ரீ ஜம்ரி கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது மாநாட்டை தொடக்கி வைத்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வெற்றியோ தோல்வியோ மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வருகின்றது, அதை நாங்கள் மறக்க மாட்டோம்.

அக் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அக் கோரிக்கைகளை தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் கொண்டு சேர்ப்பேன் என்று டத்தோஸ்ரீ ஜம்ரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset