நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் மேன்மை மிகு நிலைக்கு கல்வியே உந்து சக்தி: சிவகுமார்

பத்து காஜா:

மலேசியாவின் வளமான மேம்பாட்டிற்கும் மேன்மைமிகு எதிர்காலத்திற்கும் கல்வியே உந்து சக்தி.

ஒருநாட்டின் கல்வி மேம்பாடும் தரமும் அதுசார்ந்த முன்னேற்றமும் நம்பிக்கையான நாட்டின் எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் நினைவுறுத்தினார்.

அவ்வகையில், கல்வி, கல்வி சார்ந்த முதலீடு, அதுநோக்கிய தூரநோக்கு சிந்தனை செயல்பாடு, விவேகமான வியூகம் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே, கல்வி சார்ந்த முன்னெடுப்புகளில் தனியார் மற்றும் பொது முதலீடுகளை அதிகரிக்கும் செயல்வடிவம் அவசியமென்றும் அதனை வரவேற்க வேண்டும்.

நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் கல்வியாளர் நிறைந்த சமூகத்தை உருவாக்கவும் கல்வியே ஆகச் சிறந்த மூலதனம் என்பதையும் சுட்டிக்காண்பித்த சிவகுமார் கல்வி சார்ந்த முதலீடு அரசாங்கம் சார்ந்து மட்டுமே இருக்கக்கூடாது. 

மாறாக தனியார் உட்பட அனைத்து தரப்பிடமிருந்தும் அது வெளிப்பட வேண்டும் என்றார்.

கல்வி சார்ந்த ஒவ்வொரு முதலீடும் நாளைய தலைமுறையை மட்டும் உருவாக்காது.

மாறாக, உலகளாவிய நிலையில் தரமான சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டை தனித்துவமான நம்பிக்கையோடு பயணிக்க வைக்கவும் அது வழிசெய்யும் என்றும் மேலும் நினைவுறுத்தினார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் உலகளாவிய நிலையிலான கல்வி சவால்களை எதிர்கொள்ளவும் தரமான கல்வி சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்தி நாட்டின் கல்வித் தரத்தை தொழில்நுட்பம், புத்தாக்கம் உட்பட நடப்பியல் சூழல் என அனைத்திலும் மேம்பாடும் வளமான இலக்கையும் எட்டுதல் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், இதுநாள் வரை கல்வி மற்றும் உயர்க்கல்விக்காக அரசாங்கம் ஒதுக்கி வந்த அதிகமான மானியம், தொழில்திறன் கல்விக்கான முதலீடு ஆகியவற்றைப்  பாராட்டிய அவர் பிடிபிடிஎன், பிடிபிகே, பொது உபகாரச் சம்பளம் போன்ற கல்வி உதவி திட்டங்களையும் பாராட்டினார்.

மேலும், இத் திட்டங்கள் மேலும் வலுவடையவும் இன்னும் அது பெரும் அளவில் விரிவடையவும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமென்றார்.

அதுமட்டுமின்றி, பி40 எனப்படும் ஏழ்மைநிலை சமூகத்தின் மீதும் நம் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் சார்ந்த பிள்ளைகளின் கல்வி நிலையும் எதிர்காலம் சிறந்த இலக்கை எட்ட அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளோடு தனியார் துறைகளும் கைகோர்த்து அச் சமூகம் கல்வியில் சிறந்த இலக்கை எட்ட பெரும் பங்காற்ற வேண்டும் என்றார்.

குறிப்பாக அம் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அதன் உட்கட்டமைப்போடு வசதிகளும் தேவைகளும் இருப்பதோடு நவீன தொழில்நுட்பம் சார்ந்த அத்தியாவசியமும் இருப்பதை உறுதி செய்ய தனியார்துறை முன் வரவேண்டும் சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset