நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் 156 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

சசுபாங் பெஸ்தாரி:

சுங்கைபூலோவில் 156 உயர் கல்வி மாணவர்களுக்கு  கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

அத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

"சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்.

"அவ்வகையில் இன்று 156 உயர் கல்வி மாணவர்களுக்கு 50ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.

"பேங்க ரக்யாத் அறவாரியத்தின் ஆதரவுடன் இந் நிதி வழங்கப்பட்டது.

"பி40 குடும்பங்களைச் சேர்ந்த அம்மாணவர்கள் கல்வி கட்டணம் அல்லது கல்விக்கான பொருட்கள் வாங்குவதற்கு இப்பணத்தை பயன்படுத்தலாம்.

"இந்த நிதியுதவி கற்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாகவும் பயனையும் அளிக்கும் நான் நம்புகிறேன்.

"இதே போன்று  சுங்கைபூலோவில் பள்ளி மாணவர்களுக்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

"குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களிலும் கவனம் செலுத்தப்படும்" என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இந்த உதவி நிதி வழங்கும் நிகழ்வில் பேங்க் ரக்யாத் அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோ நூருல் அமால், தலைமை நிர்வாகி சைபுல் மிஷேல், துணையமைச்சரின் முதன்மை நிர்வாகி டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset