
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் மறைவு: தலைவர்கள் இரங்கல்
கோவை:
உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் ‘பெரியார் விருது’ மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வயோதிகத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு படுத்த படுக்கையானார்.
படுக்கையில் இருந்தபடியே உணவுகளை, மருந்துகளை எடுத்து வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (செப்.27) இரவு தனது வயோதிக்கத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 12:35 pm
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
April 18, 2025, 4:59 pm
தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்: முதல்வர் ஸ்டாலின்
April 17, 2025, 8:04 pm
உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது: விஜய் பாராட்டு
April 16, 2025, 9:21 pm
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பொழிவு
April 16, 2025, 8:00 pm
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
April 16, 2025, 5:59 pm
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
April 16, 2025, 2:18 pm